பெரம்பலூர்
டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய மதுப்பிரியர்கள்
|டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் அலைமோதினர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 15-ந் தேதி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள மொத்தம் 90 டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் விற்பனை கோடிக்கணக்கில் நடந்தது. நேற்று முன்தினம் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. ஆனாலும் அன்றைய தினமும் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனையும் படுஜோராக நடந்தது. விடுமுறை முடிந்து நேற்று மதியம் சரியாக 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. முன்கூட்டியே வந்து காத்திருந்த மது பிரியர்கள் டாஸ்மாக் கடை திறந்தவுடன் முண்டியடித்து ஓடிக்கொண்டு மது பாட்டில்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். பின்னர் அவர்களில் சிலர் மதுபான கூடத்துக்கு சென்றும், சிலர் திறந்த வெளியில் அமர்ந்தும் மது அருந்தினர். நேற்று இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட மது பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் நேற்றும் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களின் விற்பனை கோடிக்கணக்கில் நடந்திருக்கும் என்று தெரிகிறது.