< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நட்சத்திர விடுதிகளில் மதுபான விற்பனை உரிமம் பெறுவதற்கான கட்டணம் உயர்வு - தமிழக அரசு
|28 July 2023 3:18 PM IST
நட்சத்திர விடுதிகளில் மதுபான விற்பனை உரிமம் பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
நட்சத்திர விடுதிகளில் மதுபானம் விற்பதற்காக உரிமம் பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 5 ஸ்டார் ஹோட்டல்களில் மதுபானம் விற்பதற்காக உரிமம் பெறுவதற்கான கட்டணம் ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக உயர்ந்துள்ளது.
4 ஸ்டார் ஹோட்டல்களில் மதுபானம் விற்பதற்கான உரிமம் ரூ. 12 லட்சத்தில் இருந்து ரூ. 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 3 ஸ்டார் ஹோட்டல்களில் மதுபானம் விற்பதற்கான உரிமம் ரூ. 8 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.