< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
டெட்ரா பாக்கெட்டில் மதுபானங்கள் - தமிழக அரசு ஆலோசனை
|29 Jun 2023 11:57 AM IST
டாஸ்மாக் கடைகளில் டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானத்தை அறிமுகப்படுத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
சென்னை,
டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுபானங்களை அறிமுகம் செய்வது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானத்தை விற்பனை செய்வது தொடர்பாக சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
டெட்ரா பாக்கெட்டுகள் எளிதில் உடையாது, செலவு குறைவு மற்றும் கலப்படம் செய்ய முடியாது என்பதால், அவற்றை அறிமுகப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானங்களை விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்பதாலும் அவற்றை கொண்டு வர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.