< Back
மாநில செய்திகள்
சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
வேலூர்
மாநில செய்திகள்

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

தினத்தந்தி
|
1 April 2023 9:50 PM IST

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அக்ராவரம் பூங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது 38). இவர் தொடர்ந்து சாராயம் விற்று வந்ததாக சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். ஆனாலும் ராஜீவ்காந்தி பூங்குளம் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவது, சாராயத்தை கடத்துவது, விற்பது என பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் ராஜீவ்காந்தி தொடர்ந்து சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் கடந்த மாதம் 2-ந் தேதி குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் ராஜீவ்காந்தியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ராஜீவ் காந்தியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்