< Back
மாநில செய்திகள்
சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

தினத்தந்தி
|
29 March 2023 11:45 PM IST

ஆம்பூர் அருகே சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஆம்பூரை அடுத்த தென்னம்பட்டு ஊராட்சி மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் தசரதன் (வயது 40). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் சாராயம் விற்பனை செய்த போது உமராபாத் போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில், தசரதனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.

அதற்கான நகர் சிறையில் உள்ள தசரதனிடம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்