< Back
மாநில செய்திகள்
சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

தினத்தந்தி
|
21 Dec 2022 11:48 PM IST

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் தாலுகா வதியங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 29). இவர் சாராய விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது போளூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இவர் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக சாமிநாதனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்