< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்
|11 July 2023 9:36 PM IST
நாட்றம்பள்ளி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராயத்தை முழுமையாக ஒழிக்கவும், வெளிமாநில மதுபாட்டில்கள் கொண்டு வந்து விற்பனை செய்வதை தடுக்கவும், போலி மதுபாட்டில்கள் விற்பதை தடுக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் வாணியம்பாடி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் நாட்டறம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு கிராமத்தில் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள 1824 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக வாணியம்பாடி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்து தலைமறைவான மூர்த்தி மற்றும் அவரது மனைவி சாந்தா ஆகியோரை தேடி வருகின்றனர்.