< Back
மாநில செய்திகள்
அன்னியூர்டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருட்டு
விழுப்புரம்
மாநில செய்திகள்

அன்னியூர்டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருட்டு

தினத்தந்தி
|
26 Aug 2023 12:15 AM IST

அன்னியூர் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருடு போனது.


செஞ்சி,

விழுப்புரம் அருகே அன்னியூரில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் விற்பனையாளர் மண்ணாங்கட்டி நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு சென்றார்.

இந்நிலையில் இரவு சுமார் 11:30 மணி அளவில் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை அந்த வழியாக ரோந்து பணி சென்ற போலீஸ்காரர் முருகன் பார்த்து, கஞ்சனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்போில் போலீசார் மற்றும் விற்பனையாளர் மண்ணாங்கட்டி ஆகியோர் அ ங்கு வந்து பார்த்தனர். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, பல்வேறு வகையான 75 மதுபாட்டில்கள் திருடு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ. 12 ஆயிரம் இருக்கும்.

இது குறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் சேகர் கொடுத்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்