மயிலாடுதுறை
மது பாட்டில்கள் விற்றவர் கைது
|கடை திறப்பதற்கு முன்பே
மயிலாடுதுறை நகரில் பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து மாவட்ட கலெக்டர் நேற்று காலை முதல் சோதனை மேற்கொண்டார். அப்போது மகாதான தெருவில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகில் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்கள் கிடந்ததை கண்ட கலெக்டர் அதனை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அப்போது சட்டத்திற்கு புறம்பாக காலை 11:30 மணிக்கு டாஸ்மாக் கடை அருகே மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதை நேரடியாக கண்ட மாவட்ட கலெக்டர் அவரை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மது பாட்டில் விற்பனை செய்த மயிலாடுதுறை டபீர் தெருவைச் சார்ந்த கணேசன் (வயது 63) என்பவரை மயிலாடுதுறை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 55 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார் கணேசன் மீது வழக்குப்பதிவு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.