< Back
மாநில செய்திகள்
திருக்கோவிலூர் அருகேமது பாட்டில்கள் விற்றவர் கைது
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

திருக்கோவிலூர் அருகேமது பாட்டில்கள் விற்றவர் கைது

தினத்தந்தி
|
11 Sept 2023 12:15 AM IST

திருக்கோவிலூர் அருகே மது பாட்டில்கள் விற்றவர் கைது செய்யப்பட்டாா்.


திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள ஆலூர் கிராமத்தில் ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார், அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அதே ஊரைச் சேர்ந்த கருப்பன் மகன் குமார் (வயது 43) என்பவர் மதுபாட்டில்களை அவரது வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, குமாரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்