< Back
மாநில செய்திகள்
தமிழக-ஆந்திர எல்லையில் சாராயம், ஊறல் பறிமுதல் செய்து அழிப்பு
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

தமிழக-ஆந்திர எல்லையில் சாராயம், ஊறல் பறிமுதல் செய்து அழிப்பு

தினத்தந்தி
|
2 July 2022 6:14 PM IST

தமிழக-ஆந்திர எல்லையில் சாராயம், ஊறல் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கும், வேலூர் மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கும் வாணியம்பாடி அருகே உள்ள தமிழக-ஆந்திர எல்லை பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக தகவல் வந்தது.

அதன்பேரில் வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் வேலூர் மண்டல மத்திய புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் சங்கர் ஆகியோர் தலைமையிலான போலீசார் கொரிபள்ளம், மாதகடப்பா, தேவராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது கொரிபள்ளம் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்கு தயாராக வைத்திருந்த 4 ஆயிரம் லிட்டர் ஊறல், 200 லிட்டர் சாராயம், 3 அடுப்புகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். போலீசாரை பார்த்ததும் தப்பியோடி தலைமறைவான சாராயம் காய்ச்சும் கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்