< Back
மாநில செய்திகள்
வாணியம்பாடி அருகே மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை - 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு
மாநில செய்திகள்

வாணியம்பாடி அருகே மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை - 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு

தினத்தந்தி
|
6 Oct 2022 6:15 AM IST

கடந்த 4 நாட்களாக மதுவிலக்கு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 8 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தமிழக-ஆந்திரா எல்லை மலைப்பகுதியில், மதுவிலக்கு போலீசார் கடந்த 3 நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டு, சாராய ஊறல்களை அழித்தனர். இந்த நிலையில் 4-வது நாளாக, மாதகடப்பா மலை பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் 12 பேரல்களில் சாராயம் காய்ச்ச வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிட்டர் ஊறல்கள் அழிக்கப்பட்டன. இந்த வனப்பகுதியில் கடந்த 4 நாட்களாக மதுவிலக்கு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 8 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்