< Back
மாநில செய்திகள்
விருத்தாசலம், சிதம்பரத்தில்  வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்த அனைத்துக்கட்சி கூட்டம்
கடலூர்
மாநில செய்திகள்

விருத்தாசலம், சிதம்பரத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்த அனைத்துக்கட்சி கூட்டம்

தினத்தந்தி
|
2 Aug 2022 5:38 PM GMT

விருத்தாசலம், சிதம்பரத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்த அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.


விருத்தாசலம்,

விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு திட்டக்குடி தாசில்தார் கார்த்திக் தலைமை தாங்கினார். தேர்தல் தலைமையிடத்து துணை தாசில்தார்கள் விருத்தாசலம் வேல்முருகன், திட்டக்குடி ஜெயச்சந்திரன், வேப்பூர் கோவிந்தன், கணினி இயக்குனர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான ஆலோசனைகள் வழங்கி கருத்து பெறப்பட்டது.

சிதம்பரம்இதேபோல் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தேர்தல் துணை தாசில்தார் பிரகாஷ் தலைமை தாங்கினார். தேர்தல் துணை தாசில்தார்கள் ரத்தினகுமார், ரத்தினசபாபதி, வருவாய் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தி.மு.க. சார்பில் நகர மன்ற கொரடா ஜேம்ஸ் விஜயராகவன், அ.தி.மு.க., கருப்பு ராஜா, பா.ஜ.க சார்பில் ரகுபதி, தே.மு.தி.க., நகர தலைவர் கணேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் சேகர் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து படிவம் 6 பி பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் தங்களது ஆதார் எண்ணை இணைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்