விழுப்புரம்
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க வாட்ஸ்-அப்பில் அனுப்பலாம்
|மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க வாட்ஸ்-அப்பில் அனுப்பலாம் என்று விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சைமன்சார்லஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் இணையதளம் மூலமும், மின்வாரிய அலுவலகங்களின் மூலமும் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் கோட்ட மின் நுகர்வோர்களின் வசதிக்காக அந்தந்த பிரிவு அலுவலகங்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் மின் நுகர்வோர்களின் வசதிக்காக சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்களின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு மின் கட்டண அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்து ஒரே புகைப்படமாக எடுத்து அனுப்பினால் ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வாட்ஸ்-அப்பில் அனுப்பலாம்
அதன்படி விழுப்புரம் நகரம்-1 உதவி பொறியாளருக்கு 94458 55751, விழுப்புரம் நகரம்-2 உதவி பொறியாளருக்கு 94458 55752, விழுப்புரம் நகரம்-3 உதவி பொறியாளருக்கு 94458 55753, விழுப்புரம் கிராமம் கிழக்கு உதவி பொறியாளருக்கு 94458 55754, நகரம் தெற்கு உதவி பொறியாளருக்கு 94990 50367, பில்லூர் உதவி பொறியாளருக்கு 94458 55755, விழுப்புரம் கிராமம் மேற்கு உதவி பொறியாளருக்கு 94458 55758, ஜானகிபுரம் உதவி பொறியாளருக்கு 94458 55708, கப்பூர்- 94458 55761, கெடார்- 94458 55759, காணை- 94458 55760, விக்கிரவாண்டி- 94458 55740, விக்கிரவாண்டி மேற்கு உதவி பொறியாளருக்கு 94458 55741, பனையபுரம்- 94458 55743, முண்டியம்பாக்கம்- 94458 55742, பூத்தமேடு- 94458 55764, அன்னியூர்- 94458 55766, தும்பூர்- 94458 55765, நேமூர்- 94458 55767, சித்தலம்பட்டு- 94458 55746, ராதாபுரம்- 94458 55747, வழுதாவூர்- 94458 55748, முண்டியம்பாக்கம்- 94458 55760, அரசூர்- 94458 55913, ஆனத்தூர்- 94458 55914, அரகண்டநல்லூர்- 94458 55877, கண்டாச்சிபுரம்- 94458 55880, முகையூர்- 94458 55879, வீரபாண்டி- 94458 55878, திருவெண்ணெய்நல்லூர் நகரம்- 94458 55909, திருவெண்ணெய்நல்லூர் கிராமம்- 94458 55910, திருவெண்ணெய்நல்லூர் கிராமம் வடக்கு- 94458 55911, பெரியசெவலை- 94458 55912, சித்தலிங்கமடம்- 94458 55873 ஆகிய எண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.