< Back
மாநில செய்திகள்
இடி விழுந்து மரத்தில் தீ; பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

இடி விழுந்து மரத்தில் தீ; பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்

தினத்தந்தி
|
16 Sept 2022 1:00 AM IST

இடி விழுந்து மரத்தில் தீ பிடித்து பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மழை பெய்தது. அப்போது டி.டி.மெயின் ரோட்டில் கீழக்கோட்டை அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள தென்னை மரத்தில் திடீரென இடிவிழுந்து தீ பிடித்து எரியத் தொடங்கியது. இடி விழுந்த சத்தம் கேட்டு அந்தபகுதி மக்கள் அலறி அடித்து ஓடினர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து ஆர்.எஸ்.மங்கலம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மரத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

மேலும் செய்திகள்