< Back
மாநில செய்திகள்
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் இரண்டு நாட்கள் லேசான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
மாநில செய்திகள்

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் இரண்டு நாட்கள் லேசான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தினத்தந்தி
|
31 Jan 2024 1:46 PM IST

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

31-01-2024 மற்றும் 01-02-2024: தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.

02-02-2024: தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

03-02-2024 முதல் 06-02-2024 வரை:தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

உறைபனி எச்சரிக்கை:-

31-01-2024: தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்