< Back
மாநில செய்திகள்
பரவலாக பெய்த சாரல் மழை
நாமக்கல்
மாநில செய்திகள்

பரவலாக பெய்த சாரல் மழை

தினத்தந்தி
|
4 Nov 2022 12:15 AM IST

நாமக்கல் மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்தது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக பரமத்திவேலூர் பகுதியில் 20 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு:-

பரமத்திவேலூர்-20, மங்களபுரம்-19, கொல்லிமலை-18, ராசிபுரம்-14, மோகனூர்-13, புதுச்சத்திரம்-11, சேந்தமங்கலம்-9, கலெக்டர் அலுவலகம்-6, எருமப்பட்டி-5, நாமக்கல்-2, திருச்செங்கோடு-1. மாவட்டத்தின் மொத்த மழைஅளவு 118 மி.மீட்டர் ஆகும்.

மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதலே விட்டுவிட்டு சாரல்மழை பெய்தது. நாமக்கல் நகரை பொறுத்த வரையில் நேற்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை சாரல்மழை விட்டுவிட்டு பெய்தது. இதேபோல் மாலை 6 மணிக்கு மேல் மீண்டும் சாரல்மழை பெய்ய தொடங்கியது. இதனால் பொதுமக்கள் குடைபிடித்து செல்வதை பார்க்க முடிந்தது. இந்த மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 79 ஏரிகளில் இதுவரை 32 ஏரிகள் நிரம்பி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்