விருதுநகர்
பேரனுக்கு ஆயுள் தண்டனை
|பேரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தோணுகால் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 26). இவர் அதேபகுதியில் வசிக்கும் தனது பாட்டி கருப்பாயி அம்மாள் (89) வீட்டுக்கு சென்று மதுபோதையில் சாப்பாடு கேட்டுள்ளார். அப்போது பாட்டி வேலைக்கு செல்லாமல் ஏன் வெட்டியாக சுத்தி கொண்டு இருக்கிறாய் என சத்தம் போட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலமுருகன், வீட்டில் இருந்த தேங்காய் துருவியால் கருப்பாயியை சராமரியாக தாக்கி கொலை செய்தார். இதுகுறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில்நடைபெற்று வந்தது. இந்த வழக்கை மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து பாலமுருகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.