மயிலாடுதுறை
அண்ணன்- தம்பிக்கு ஆயுள்தண்டனை
|சீர்காழி அருகே இடப்பிரச்சினையில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன்- தம்பிக்கு ஆயுள்தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
மயிலாடுதுறை:
சீர்காழி அருகே இடப்பிரச்சினையில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன்- தம்பிக்கு ஆயுள்தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
இடப்பிரச்சினை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா ஆனைக்காரன்சத்திரம் போலீஸ் சரகம் சோதியக்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது30). இவருக்கும், இவரது வீட்டின் அருகில் வசிக்கும் சந்துரு மகன்கள் பாஸ்கரன்(43), ஆசைதம்பி (35) ஆகியோருக்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்துவந்தது. இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி பாஸ்கரன், ஆசைதம்பி ஆகிய இருவரும் சேர்ந்து இடப்பிரச்சினை தொடர்பாக சத்தியமூர்த்தியை கட்டை மற்றும் கற்களால் பலமாக தாக்கினர்.
ஆயுள் தண்டனை
இதில் படுகாயமடைந்த சத்தியமூர்த்தி சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஆனைக்காரன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.இதில் சத்தியமூர்த்தி கொலை வழக்கில் பாஸ்கரன், அவரது சகோதரர் ஆசைத்தம்பி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.16 ஆயிரம் அபராதமும், , அபராதம் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி இளங்கோவன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு சார்பில் மாவட்ட அரசு வக்கீல் ராம.சேயோன் ஆஜரானார்.