< Back
மாநில செய்திகள்
வாலிபரை கொன்றவருக்கு ஆயுள்தண்டனை
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

வாலிபரை கொன்றவருக்கு ஆயுள்தண்டனை

தினத்தந்தி
|
8 Feb 2023 12:15 AM IST

வாலிபரை கொன்றவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மேட்டு சோழந்தூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 33). ஜே.சி.பி. எந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். இவர் வடவயலை சேர்ந்த ராஜ்குமாரை (40) உதவிக்கு அழைத்து செல்வாராம். அப்போது அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ந் தேதி மணிகண்டன் ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது அங்கு வந்த ராஜ்குமாருக்கும், மணிகண்டனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதன்பின்னர் மணிகண்டன் மேட்டு சோழந்தூர் பள்ளிக்கூட பகுதியில் படுத்திருந்தபோது அங்கு வந்த ராஜ்குமார் கல்லை தலையில் போட்டு மணிகண்டனை கொலை செய்தார். இதுதொடர்பாக திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி விஜயா மேற்கண்ட ராஜ்குமாருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், அதனை கட்டத்தவறினால் மேலும், 2 மாதம் சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கார்த்திகேயன் ஆஜரானார்.

மேலும் செய்திகள்