< Back
மாநில செய்திகள்
ஒழுக்கம், நேர்மை இருந்தாலே வாழ்க்கை  நிம்மதியாக இருக்கும்: ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து
மாநில செய்திகள்

ஒழுக்கம், நேர்மை இருந்தாலே வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்: ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து

தினத்தந்தி
|
15 Jan 2024 9:59 AM IST

தமிழகத்தில் பொங்கல் திருநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் பொங்கல் திருநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

சென்னை போயர்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது,

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென இந்த பொன்நாளில் நான் இறைவனை வேண்டுகிறேன்.

வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கும். நன்றி வணக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்