< Back
மாநில செய்திகள்
மாணவியை கர்ப்பமாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

மாணவியை கர்ப்பமாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை

தினத்தந்தி
|
14 April 2023 1:11 AM IST

மாணவியை கர்ப்பமாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை

தஞ்சை அருகே மாணவியை கர்ப்பமாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

விவசாய கூலி தொழிலாளி

தஞ்சை மாவட்டம், திருவையாறு தாலுகாவை சேர்ந்தவர் 51 வயதான விவசாய கூலித் தொழிலாளி. இவருடைய மகள் கடந்த 2021-ம் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அப்போது கொரோனா காரணமாக பள்ளி செயல்படாததால் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கூலி தொழிலாளி தனது மகள் என்று பாராமல் மாணவியிடம் தவறாக நடந்து கொண்டார். இதன் விளைவாக மாணவி கர்ப்பம் அடைந்தார். இந்த நிலையில் அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்ற போது தான் மாணவிக்கு தான் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து மாணவி திருவையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து மாணவியின் தந்தையை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. அதன்படி இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது நீதிபதி ஜி. சுந்தர்ராஜன் விசாரித்து மாணவியின் தந்தைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜரானார்.

Related Tags :
மேலும் செய்திகள்