சேலம்
சேலம் கோர்ட்டில்போலீஸ் உதவி கமிஷனரை மிரட்டிய ஆயுள் தண்டனை கைதி மீது வழக்கு
|சேலம் கோர்ட்டில் போலீஸ் உதவி கமிஷனரை மிரட்டிய ஆயுள் தண்டனை கைதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சேலம
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக டெனிபா, சிலம்பரசன், திருநாவுக்கரசு, ஜீசஸ் உள்பட 8 பேரை கிச்சிப்பாளையம் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேலம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் இந்த வழக்கில் தொடர்புடைய 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அப்போது 8 பேரின் உறவினர்களும் கோர்ட்டில் திரண்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்திவிட்டு 8 பேரையும் போலீஸ் வேனில் ஏற்ற முயன்றனர். இதில் திருநாவுக்கரசு என்பவர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் உதவி கமிஷனர் ராமமூர்த்தியை மிரட்டியதுடன் தகாத வார்த்தையால் பேசினார். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரர் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் திருநாவுக்கரசு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.