< Back
மாநில செய்திகள்
விருதுநகர் வெடிவிபத்து: பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து
மாநில செய்திகள்

விருதுநகர் வெடிவிபத்து: பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து

தினத்தந்தி
|
20 Sept 2024 11:00 AM IST

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே குகன்பாறை என்ற பகுதியில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் நேற்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பட்டாசு தயாரிப்பதற்கான மருந்து கலவை தயார் செய்யும் பணியின்போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் கோவிந்தராஜ் என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், குருமூர்த்தி என்ற தொழிலாளி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்