பானிபூரி கடைகளுக்கு இனி லைசென்ஸ் கட்டாயம்- உணவு பாதுகாப்புத் துறை
|சென்னையில் பெருகிவரும் சாலையோர கடைகலைபோல பானிபூரிகடைகளும் அதிகரித்துள்ளன.
சென்னை,
சென்னையில் பெருகிவரும் சாலையோர கடைகளைபோல பானிபூரிகடைகளும் அதிகரித்துள்ளன. நகரின் எந்த பகுதியில் பார்த்தாலும் முக்கிய இடங்களில் வடமாநிலத்தவரின் பானிபூரிகடைகளை காணமுடிகிறது.சிறிய முதலீட்டில் நடக்கும் இந்த தொழில் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளன. பானிபூரி விற்பனையை முறைப் படுத்தவும் சுகாதாரமாக விற்கவும் உணவு பாதுகாப்புத் துறை புதிய முயற்சியை மேற்கொண்டது.
சாலையோரங்களில் செயல்படும் சாலையோர பானிபூரி கடைகளுக்கு கட்டாயம் லைசென்சு பெறவேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்து உள்ளது. ஒருவருடத்திற்கான லைசென்சு கட்டணமாக ரூ.100 செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். சென்னையில் நேற்று ஒரே நாளில் 600 வட மாநி லத்தவருக்கு பானிபூரி தொழில் செய்வதற்கான லைசென்சு வழங்கப்பட்டன.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை சென்னை மாவட்ட அதிகாரி சதீஷ் குமார் கூறியதாவது:-
சென்னையில் பல்வேறு இடங்களில் சாலையோ ரங்களில் பானிபூரி விற் பனை நடக்கிறது. 1000- க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கலாம். அவற்றை வரையறைப்படுத்தவும். பானிபூரி தயாரித்து விற்பனை செய்வதில் சுகாதாரத்தை பின்பற்றவும், கலப்படம் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.
பழைய எண்ணெய், மீதமுள்ள பழைய உணவுப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது, சுகாதாரமான முறையில் விற்பது குறித்து மாநகராட்சி அம்மா மாளிகையில் பயிற்சி அளிக்கப்பட்டது. வரும் நாட்களில் வார்டு வாரியாக இந்த பயிற்சி அளித்து லைசென்சு வழங்கப்படும்.
உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதை முறைப்படுத்தும் நோக்கத்தில் பானிபூரி விற்பனையாளர்களுக்கு லைசென்சு அவசியமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.