< Back
மாநில செய்திகள்
காசோலை கொடுத்து பல லட்சம் கடன் வாங்கி மோசடி - எல்.ஐ.சி.ஏஜெண்ட் மகளுடன் கைது
சென்னை
மாநில செய்திகள்

காசோலை கொடுத்து பல லட்சம் கடன் வாங்கி மோசடி - எல்.ஐ.சி.ஏஜெண்ட் மகளுடன் கைது

தினத்தந்தி
|
7 Dec 2022 1:19 PM IST

தாம்பரம் அருகே காசோலை கொடுத்து பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த எல்.ஐ.சி.முகவர் மகளுடன் கைது செய்யப்பட்டார்.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ரெஜிகுமார் (வயது 47). இவரது மகள் ஜூலி (25). ரெஜிகுமார் எல்.ஐ.சி. ஏஜென்ட் ஆகவும், ஜூலி சென்னையில் உள்ள சாப்ட்வேட் நிறுவனத்திலும் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ரெஜிகுமார், மகளுக்கு திருமணம் செய்ய திட்டமிட்டு அதே பகுதியை சேர்ந்த மோகன், ஜீவரத்தினம், கவிதா உட்பட பலரிடம் பல லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது ஜூலியின் திருமணம் முடிந்ததும் ரெஜிகுமார் கடனை திருப்பி கொடுக்காததால் அவரிடம் பணம் கொடுத்தவர்கள் கடனை திருப்பி தரும்படி கேட்டுள்ளனர். இதனால் அவர் கடன் தொகைக்கான காசோலைகளை வழங்கியுள்ளார். அவர் கொடுத்த காசோலையை வங்கிக்கு கொண்டு சென்றபோது பணமாகாமல் திரும்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த மோகன், ஜீவரத்தினம், கவிதா ஆகியோர் ரெஜிகுமாரிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர்.

அவர் முறையாக பதிலை அளிக்காததால் ஆத்திரமடைந்தவர்கள் ரெஜிகுமாரின் மகள் ஜூலியின் திருமண புகைப்படத்துடன் செக்மோசடிகும்பல் என வீட்டின் சுவற்றில் துண்டுநோட்டீஸ் ஒட்டி யுள்ளனர். இது தொடர்பாக ரெஜிகுமார் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியதாக கூறி மோகன், ஜீவரத்தினம், கவிதா ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார். இதனால் சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த மோகன், ஜீவரத்தினம், கவிதா ஆகியோர் ரெஜிகுமாரிடம் பணம் கொடுத்து ஏமாந்த சிலர் நேற்று முன்தினம் மாலை கிழக்கு தாம்பரத்தில் ரெஜிகுமாரை வழிமறித்து வாங்கிய கடனை தரும்படி கேட்டுள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சேலையூர் போலீசார், வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து எந்த பிரச்னையாக இருந்தாலும் போலீஸ் நிலையம் வந்து தீர்த்துகொள்ளுங்கள் என கூறி அழைத்து சென்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தாய் ரெஜிகுமார் மற்றும் மகள் ஜூலி ஆகியோர் திருமணத்திற்காக பலரிடம் பல லட்சம் வரை கடன் பெற்று போலி காசோலைகள் கொடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்