தர்மபுரி
மாரியம்பட்டியில் நூலக திறப்பு விழா
|பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் அதிகாரப்பட்டி ஊராட்சியில் உள்ள கோட்டமேடு, மாரியம்பட்டி, செங்காட்டுப்புதூர், அதிகாரப்பட்டி கிராமங்களில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் மாரியம்பட்டி கிராமத்தில் நூலகம் கட்டப்பட்டது. நூலகத்தை பராமரிக்க ஊராட்சி மூலம் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மகளிர் சுயஉதவி குழு பெண்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஊராட்சி சார்பில் குறைவான சம்பளம் வழங்கப்பட்டதால் ஓய்வு பெற்ற அரசு ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. மேலும் ஊராட்சியில் 2 நூலகங்கள் இருந்ததால் மாரியம்பட்டி நூலகம் மூடப்பட்டது.
இந்த நிலையில் அந்த கிராம வாலிபர்கள் ஒன்று சேர்ந்து நூலக கட்டிடத்துக்கு வர்ணம் பூசி, பலரிடம் புத்தகங்கள் அன்பளிப்பாக பெற்று நூலகத்துக்கு வழங்கினர். இந்த நூலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. தர்மபுரி, கிருஷ்ணகிரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல தலைவர் தமிழ் அன்வர் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா நூலகத்தை திறந்து வைத்து பேசினார். மேலும் கட்சியின் சார்பில் 100 புத்தகங்கள், போட்டி தேர்வு புத்தங்கள் வழங்கப்பட்டன. இதில் ஒன்றிய செயலாளர் பழனி, பாப்பிரெட்டிப்பட்டி நகர செயலாளர் மாயகண்ணன், அரவிந்தன், உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.