< Back
மாநில செய்திகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தேனி
மாநில செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
13 Dec 2022 12:30 AM IST

தேனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பேத்கருக்கு காவி சாயம் பூசி, குங்குமம், திருநீறு பூசி அவமதிப்பு செய்பவர்களை கண்டித்து தேனி பங்களாமேட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், மாநில துணைச் செயலாளர்கள் தமிழன், கோமதி ஆனந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் செயல்படும் நபர்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில், மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர செயலாளர் ஈஸ்வரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்