< Back
மாநில செய்திகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கையெழுத்து இயக்கம்
தென்காசி
மாநில செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கையெழுத்து இயக்கம்

தினத்தந்தி
|
3 July 2023 12:15 AM IST

குற்றாலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

குற்றாலம்,

குற்றாலம் அருவிகளுக்கு வரும் 2 மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.

குற்றாலம் பஸ்நிலையம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராம.உதயசூரியன் முன்னிலை வகித்தார். கட்டணத்தை ரத்து செய்யக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் இசக்கிதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் அயூப்கான், இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர்கள் சுப்பையா, மாரியப்பன், பழனிசாமி, ம.ம.க. மாவட்ட செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வட்டார குழு உறுப்பினர் ராமமூர்த்தி, ம.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் வெங்கடேஸ்வரன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலிவருணன், தமிழ்புலிகள் மாவட்ட செயலாளர் குற்றாலம் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் சித்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்