< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம்
|30 Sept 2023 12:01 AM IST
சு.ஆடுதுறை கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மங்களமேடு அருகே உள்ள சு.ஆடுதுறை கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேப்பூர் வடக்கு ஒன்றியம் சார்பில் வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி நிர்வாகிகள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மண்டல செயலாளர் அன்பானந்தம், மாநில செயலாளர் செங்கோலன், மண்டல துணைச் செயலாளர்கள் லெனின், ஸ்டாலின், மாறன், மாவட்ட செய்தி தொடர்பாளர் உதயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.