தென்காசி
விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம்
|செங்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை இப்தார் அரங்கில் செங்கோட்டை ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. ஒன்றியச்செயலாளா் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றியப்பொறுப்பாளா் எஸ்ரா டேனியல், ஒன்றிய அமைப்பாளா் இளையராஜா, துணைச்செயலாளா்கள் விவேக், சாமுவேல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனா். ஒன்றிய பொறுப்பாளா் மோசஸ் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக மாவட்டச்செயலாளா் பண்பொழி செல்வம், மண்டல செயலாளா் சித்திக், மாவட்ட செய்தி தொடா்பாளா் சந்திரன், நிலவுரிமை மீட்பு மாவட்ட துணை அமைப்பாளா் செய்யது சுலைமான், மண்டலச்செயலாளா் முரசு தமிழப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினா். கூட்டத்தில் புதிய முகாம் கட்டமைத்தல், புதிய கொடிகம்பங்கள் ஏற்றுதல், ஒவ்வொரு முகாமில் பொறுப்பளா்கள் அமைத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நகர பொறுப்பாளா் முகம்மது அனீஸ் நன்றி கூறினார்.