< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
திருவொற்றியூர்-விம்கோ நகர் இடையே 'லெவல் கிராசிங் கேட்' தற்காலிகமாக மூடப்படுகிறதும்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
|18 Jun 2022 8:13 AM IST
திருவொற்றியூர்-விம்கோ நகர் இடையே ‘லெவல் கிராசிங் கேட்’ தற்காலிகமாக மூடப்படுகிறதும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக சென்னை திருவொற்றியூர்-விம்கோ நகர் ரெயில் நிலையம் இடையே உள்ள அண்ணாமலை நகர் ரெயில்வே 'லெவல் கிராசிங் கேட்' (எண்: 4) வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று தற்காலிகமாக மூடப்படுகிறது. எனவே வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையாக கே.சி.பி. சாலை மற்றும் திருவொற்றியூர் மாட்டு மந்தை ரெயில்வே மேம்பாலம் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.