< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம்
|5 March 2024 6:40 PM IST
சட்டப்பேரவை செயலகம் கடிதம் அனுப்பியுள்ள நிலையில் திருக்கோவிலூர் தொகுதிக்கு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது.
சென்னை,
திருக்கோவிலூர் தொகுதி காலியாக உள்ளதாக, தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம் எழுதியுள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து திருக்கோவிலூர் தொகுதி காலியானது.
தற்போது தேர்தல் ஆணையத்திற்கு இது தொடர்பாக முறைப்படி சட்டபேரவை செயலகம் கடிதம் எழுதியுள்ளது. இதனால், நாடாளுமன்ற தேர்தலின் போது திருக்கோவிலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இதனால், இந்த இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது.