< Back
மாநில செய்திகள்
தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை சிறப்பாக நடத்தியமைக்காக பாராட்டு தெரிவித்து கேரள முதல் மந்திரிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மாநில செய்திகள்

தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை சிறப்பாக நடத்தியமைக்காக பாராட்டு தெரிவித்து கேரள முதல் மந்திரிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தினத்தந்தி
|
4 Sept 2022 11:53 PM IST

தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை சிறப்பாக நடத்தியமைக்காக பாராட்டு தெரிவித்து கேரள முதல் மந்திரிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை சிறப்பாக நடத்தியமைக்காக பாராட்டு தெரிவித்தும் விருந்தினர்களாக சென்ற தங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான உபசரிப்புகளுக்கு நன்றி தெரிவித்தும் கேரள முதல் மந்திரிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவனந்தபுரத்தில் நேற்று (3.3.2022) தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை சிறப்பாக நடத்தியமைக்காக பாராட்டு தெரிவித்தும், விருந்தினர்களாக சென்ற தங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான உபசரிப்புகளுக்கு நன்றி தெரிவித்தும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு இன்று (4-9-2022) கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் அக்கடிதத்தில், சமீப காலத்தில் முன்மொழியப்பட்ட முன்னெடுப்புகளை விரைவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வோம் என்று தாம் நம்புவதாகவும் தனது கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்