< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சமூகநீதியை நிச்சயமாக வென்றெடுப்போம் - ராமதாஸ் நம்பிக்கை
|17 Sept 2022 2:02 PM IST
நமக்கான சமூகநீதியை நாம் நிச்சயமாக வென்றெடுப்போம் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
வன்னியர் இட ஒதுக்கீட்டு போரில் துப்பாக்கிக் குண்டுகளை மார்பில் தாங்கி இன்னுயிர் ஈந்த 21 தியாகிகளுக்கு அவர்களின் 35-வது நினைவு நாளில் வீர வணக்கம் செலுத்துகிறேன். அவர்களின் தியாகத்திற்கு இந்த உலகில் ஈடு இணையில்லை, அவர்களின் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்.
வன்னியர் 10.50 சதவீத உள் இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்பதில் இதுவரை என்ன நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. இப்போது என்ன நடக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கிறது. இனி நடக்கப் போவதும் நன்றாகவே நடக்கும். நமக்கான சமூகநீதியை நாம் நிச்சயமாக வென்றெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.