< Back
மாநில செய்திகள்
இனம் காக்க இந்திக்காரர்களை வெளியேற்றுவோம் - தமிழ் தேசிய பேரியக்கம்
மாநில செய்திகள்

இனம் காக்க இந்திக்காரர்களை வெளியேற்றுவோம் - தமிழ் தேசிய பேரியக்கம்

தினத்தந்தி
|
10 Nov 2022 2:14 PM IST

தமிழ் காக்க, இந்தியை வெளியேற்றுவோம், இனம் காக்க இந்திக்காரர்களை வெளியேற்றுவோம் என தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, கூத்தனப்பள்ளி கிராமத்தில் உள்ள டாட்டா மின்னணு தொழிற்சாலைக்கு ஜார்கண்டிலிருந்து 860 பேரை வேலையில் சேர்த்துள்ளனர். சூழ்ச்சி புரிகிறதா தமிழர்களே. முதலாளி வட மாநிலத்தை சேர்ந்தவர்கள். தொழிலாளிகள் இந்திக்காரர்கள். எல்லா இடங்களிலும் பிற மொழியினர் ஆக்கிரமிப்பு. மண்ணின் மக்களோ வேலை இல்லாத் திண்டாட்டத்தில், வறுமையின் கோரப் பிடியில் இருக்கிறார்கள்.

அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர் மாநிலங்களில் இந்தியாவின் இதர மாநிலத்தவர் நுழையத் தடை. மாநில அரசின் உள் அனுமதி வாங்கினால்தான், அயலார் உள்ளே நுழைய முடியும். அதுவும் குறிப்பிட்ட காலத்திற்குத்தான். நம் மனம் பொங்கி எழுந்தால், அற வழியில் வீதியில் திரண்டால், வெளியார் தொழிற்சாலைகள் முன் குவிந்தால் நாம் வெல்ல முடியும், அறம் வீழாது.

எனவே, டிசம்பர் 9-ந்தேதி ஒசூர், கெலமங்கலம் ஒன்றியம் கூத்தனப்பள்ளி டாட்டா மின்னணு ஆலை வாயிலில் மக்கள் வெள்ள முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். தமிழ் காக்க, இந்தியை வெளியேற்றுவோம், இனம் காக்க இந்திக்காரர்களை வெளியேற்றுவோம். தமிழ்நாடு தமிழர்களுக்கே.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்