< Back
மாநில செய்திகள்
நிலக்கரியை யார் எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்..நான் இருக்கும் வரை நடக்காது -  சீமான் ஆவேசம்
மாநில செய்திகள்

நிலக்கரியை யார் எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்..நான் இருக்கும் வரை நடக்காது - சீமான் ஆவேசம்

தினத்தந்தி
|
4 April 2023 10:11 AM GMT

காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 புதிய நிலக்கரி சுரங்கங்களும், காவிரிப் படுகையையொட்டி ஒரு சுரங்கமும் அமைப்பதற்கான தொடக்க கட்ட பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளதாக தகவல் வெளியானது.

சென்னை,

மத்திய அரசு அனுமதி கொடுக்கட்டும், நிலக்கரியை யார் எடுக்கிறார்கள் என்று பார்ப்போம். நான் இருக்கும்வரை அது நடக்காது" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறியுள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் திருவாரூர் மாவட்டத்தில் 11 இடங்களில் மத்திய அரசு நிலக்கரி எடுக்க அனுமதி வழங்கியிருப்பது குறித்து பேசிய சீமான், "நான் இருக்கும்வரை அது நடக்காது. மத்திய அரசு அனுமதி கொடுக்கட்டும், நிலக்கரியை யார் எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்.

திராவிடர்கள் ஆட்சி இருக்கும் வரைதான் இந்த ஆட்டம் நடக்கும். நெய்வேலியில் நிலத்தை ஆக்கிரமிப்பது, திருவாரூர் மாவட்டத்தில் மீத்தேன், ஈத்தேனுக்காக பூமியைத் தோண்டுவது, நிலக்கரி எடுக்கிறேன் என...இன்னும் ஒரு 4 ஆண்டுகள் பொறுங்கள், அதன்பிறகு யாராவது தொடட்டும் பார்த்துக் கொள்கிறேன்" என்றார்.


மேலும் செய்திகள்