< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
இயற்கையையும், நாட்டு மாடுகளையும் பாதுகாப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
|19 Jan 2023 5:18 PM IST
இயற்கையையும், நாட்டு மாடுகளையும் பாதுகாப்போம் விழிப்புணர்வு பேரணி சோழிங்கநல்லூரில் நடைபெற்றது.
இயற்கையையும், நாட்டு மாடுகளையும் பாதுகாப்போம் விழிப்புணர்வு பேரணி மற்றும் சோழிங்கநல்லூர் சிலம்பம் பயிற்சி பள்ளி மற்றும் ஆதி கலைகள் மீட்டெடுப்பு இயக்கம் சார்பில் பொங்கல் விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி சோழிங்கநல்லூரில் நடைபெற்றது. பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியில் புலியாட்டம், சிலம்ப விளையாட்டுகளை மாணவ-மாணவிகள் விளையாடி அசத்தினர். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, சோழிங்கநல்லூர் சாவடி குளக்கரையில் இருந்து பேரணி தொடங்கி அண்ணா தெரு, கிராம நெடுஞ்சாலை வழியாக சென்றது. இதில் சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். லிங்கம் பயிற்சி பள்ளி ஆசிரியர் தனபால் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.