< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அய்யா வைகுண்டர் காட்டிய நல்வழியில் நடப்போம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்..!
|4 March 2023 4:43 PM IST
அய்யா வைகுண்டரின் 191-வது பிறந்தநாளில் அவரைப் போற்றி, அவர் காட்டிய நல்வழி நடக்க உறுதியேற்போம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் என்றும்; எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே என்றும் அனைவருக்குமான அறத்தையும், அன்பையும் போதித்துச் சமத்துவத்தின் திருவுருவாய் விளங்கிய அய்யா வைகுண்டரின் 191-வது பிறந்தநாளில் அவரைப் போற்றி, அவர் காட்டிய நல்வழி நடக்க உறுதியேற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.