பெண் குழந்தைகளுக்கு அதிகாரம், சமத்துவம், சுதந்திரம் வழங்குவோம் - அன்புமணி ராமதாஸ்
|பெண் குழந்தைகளை தெய்வமாக போற்றும் சமுதாயம் தமிழ்ச்சமுதாயம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
பெண் குழந்தைகளுக்கு அதிகாரம், சமத்துவம், சுதந்திரம் வழங்குவோம்!. தேசிய பெண் குழந்தைகள் நாள் இந்தியாவில் 2009-ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஜனவரி 24 அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாள் கொண்டாடுவதின் மூலம் பாலின சமத்துவம், சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துகள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது பெரிதும் உதவும்.
பெண்கள் மேம்பாட்டிற்கான திட்டங்கள் பற்றியும் பொதுமக்களுக்கு ஊடகம், செய்தித்தாள், வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாக தகவல் அரசாங்கத்தால் அளிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளை தெய்வமாக போற்றும் சமுதாயம் தமிழ்ச்சமுதாயம். அவர்களுக்கான உரிமை, அதிகாரம், அங்கீகாரம், சமத்துவம் ஆகிய அனைத்தையும் வழங்க இந்த நாளில் உறுதியேற்போம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.