< Back
மாநில செய்திகள்
பெரியாரின் சிந்தனையையும் உரைகளையும் எழுத்துகளையும் முன்னெடுக்க உறுதி எடுப்போம் - கமல்ஹாசன்
மாநில செய்திகள்

பெரியாரின் சிந்தனையையும் உரைகளையும் எழுத்துகளையும் முன்னெடுக்க உறுதி எடுப்போம் - கமல்ஹாசன்

தினத்தந்தி
|
24 Dec 2023 11:40 AM IST

தமிழக அரசியல் தலைவர்கள் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

சென்னை,

தந்தை பெரியாரின் 50-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித்தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பெரியாரின் நினைவு நாளில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவரை நினைவு கூர்ந்து தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதில், பேதம் பார்ப்போருக்கும், பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பித்துப் பிழைப்போர்க்கும், ஆணெனப் பெண்ணென ஆதிக்கம் செலுத்துவோருக்கும் இன்றைக்கும் சிங்கக் கனவாக இருக்கும் தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று அவர்தம் சிந்தனையையும் உரைகளையும் எழுத்துகளையும் முன்னெடுக்க உறுதி எடுப்போம். அவரது வீச்சு குறையாமல் இருக்க நம்மாலான பங்கை நல்குவோம், என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்