< Back
மாநில செய்திகள்
அரசியலமைப்புச் சட்டத்தை கடைபிடித்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க உறுதியேற்போம் - டிடிவி தினகரன்
மாநில செய்திகள்

அரசியலமைப்புச் சட்டத்தை கடைபிடித்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க உறுதியேற்போம் - டிடிவி தினகரன்

தினத்தந்தி
|
25 Jan 2024 10:21 PM IST

சுதந்திரத்தை அடைய பாடுபட்ட தியாகிகளையும், தேசத் தலைவர்களையும் நினைவு கொள்வோம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.


சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

நம் நாட்டில் வலுவான ஜனநாயகம் தழைத்தோங்க தொலைநோக்கு சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட இந்திய அரசியமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த இந்நாளில் நாட்டுமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்கொண்டு சுதந்திரத்தை அடைய பாடுபட்ட தியாகிகளையும், தேசத் தலைவர்களையும் நினைவு கொள்வதோடு, அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக கடைபிடித்து நாட்டின் வளர்ச்சிக்காக தனது பங்களிப்பை அளிக்க ஒவ்வொரு குடிமகனும் உறுதியேற்போம்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


மேலும் செய்திகள்