"கவர்னர் பதவியை ஒழித்திடுவோம்!" விசிக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்
|திருச்சியில் விசிக சார்பில் 'வெல்லும் சனநாயகம்' என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்று வருகிறது.
திருச்சி,
திருச்சி மாவட்டம் சிறுகனூரில் விசிக சார்பில் 'வெல்லும் சனநாயகம்' என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் விபரம்;
* பாலஸ்தீன மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஆதரவு
* பெரும்பான்மைவாத அரசியலைப் புறக்கணிப்பு
* மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுதல்
* சென்னையை இந்தியாவின் 2வது தலைநகராக அறிவித்தல்
* சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்
* வழக்காடு மொழியாகத் தமிழை அறிவித்தல்
* ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையைத் திரும்பப் பெற வேண்டும்
* கவர்னர் பதவியை ஒழித்தல்
* மாநில அதிகாரங்களை அதிகரிக்க வேண்டும்
* அமைச்சரவையிலும், மேலவைகளிலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு
* ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு சட்டம் இயற்றுதல்
* பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குதல்
* வகுப்புவாத வன்முறைத் தடுப்பு சட்டத்தை இயற்றுதல்