< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வங்கத்து சிங்கம் நேதாஜியின் வீரத்தினை போற்றிடுவோம் - ஓ.பன்னீர்செல்வம்
|23 Jan 2023 8:54 AM IST
வங்கத்து சிங்கம் நேதாஜியின் வீரத்தினை போற்றிடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 126-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரின் வீரத்தின்னை போற்றிடும் வகையில் அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வங்கத்து சிங்கம் நேதாஜியின் வீரத்தினை போற்றிடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது,
ஆங்கிலேயருக்கு எதிராக வீரமிகுந்த இளைய சமுதாயத்தை ஒன்றுதிரட்டி, இந்திய இராணுவத்தினை கட்டமைத்து, தாய் நாட்டின் விடுதலைக்காக வீரப் போர் புரிந்த வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாளான இன்று அவர்தம் துணிச்சலையும், வீரத்தினையும் நினைவுகூர்ந்து போற்றிடுவோம் என்று கூறியுள்ளார்.