< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நமது நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல உறுதிகொள்வோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|26 Nov 2022 2:48 PM IST
நமது நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல இந்திய அரசியல் சாசன தினத்தில் உறுதிகொள்வோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்ட உயரிய விழுமியங்களைக் கொண்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடித்து, அதனை வடித்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் விரும்பியபடி நமது நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல இந்திய அரசியல் சாசன தினத்தில் உறுதிகொள்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.