< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தியாகிகளின் தியாகங்களால் விளைந்த விடுதலையைப் போற்றுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|15 Aug 2024 12:32 PM IST
இன்று 68-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
சென்னை,
நாட்டின் 68-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றினார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
"விடுதலை நாளில் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 1974-ஆம் ஆண்டு தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் பெற்றுத் தந்ததன் ஐம்பதாவது ஆண்டு இது!
அந்த உரிமையுடன் 78-ஆவது விடுதலை நாளில் கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றினேன். எண்ணற்ற தியாகிகளின் தியாகங்களால் விளைந்த விடுதலையைப் போற்றுவோம்!"
இவ்வாறு முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.