< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும் - கனிமொழி எம்.பி.
|17 Sept 2024 9:46 AM IST
பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
சென்னை,
செப்டம்பர் 17ம் தேதியான இன்று தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ம்தேதி சட்டசபையில், தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்தநாளும் "சமூகநீதி நாளாக" கடைபிடிக்கப்படும் என்றும் சமூக நீதி நாளில் "சமூகநீதி நாள் உறுதிமொழியேற்க வேண்டும்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்பின்னர் பெரியாரின் ஒவ்வொரு பிறந்தநாளும் "சமூகநீதி நாளாக" கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் பெரியார் பிறந்தநாளையொட்டி திமுக எம்.பி., கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும். வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும். பாடங்களில் பிற்போக்கு ஒழியட்டும். மாணவர்களிடம் பெரியார் பேசட்டும் என பதிவிட்டுள்ளார்.