சமத்துவ பொங்கல் மகிழ்ச்சியென பொங்கட்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
|தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
பொங்கல் பண்டிகை, நாளை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பல்வேறு தலைவர்கள் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்து இருப்பதாவது;
"தை பிறந்தால் வழி பிறக்கும் என நம்பிக்கையளிக்கும் வகையில் மிக்ஜம் புயல் பேரிடர் நிவாரணம், பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் 1,000 ரூபாய் வழங்கியுள்ளோம்.
தமிழ்நாடெங்கும் சமத்துவ பொங்கல் மகிழ்ச்சியெனப் பொங்கட்டும். அது சமூக வலைதளங்களில் எதிரொலிக்கட்டும்.
"நான்தான் எல்லாம்" என்ற சர்வாதிகாரப் போக்கு அகல, கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்கும் ஆட்சி ஒன்றிய அளவில் அமைய வேண்டும். அதற்கு திமுக இளைஞர் அணியின் சேலம் மாநாட்டில் நாம் எழுப்பும் மாநில உரிமை மீட்பு முழக்கம் டெல்லி வரை அதிரட்டும்! கவனச்சிதறல்களுக்கு இடம்கொடுக்காமல் மாநாட்டின் மையநோக்கத்தை முன்னெடுப்போம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.