விருதுநகர்
சர்க்கரை உற்பத்தி குறைவு
|தேசிய அளவில் 500 சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் சர்க்கரை உற்பத்தி கடந்த ஆண்டை விட 8 சதவீதம் குறைந்துள்ளதாக சர்க்கரை உற்பத்தியாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் 500 சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் சர்க்கரை உற்பத்தி கடந்த ஆண்டை விட 8 சதவீதம் குறைந்துள்ளதாக சர்க்கரை உற்பத்தியாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை ஆலைகள்
இதுபற்றி அவர்கள் மேலும் கூறியதாவது:-
2022-ம் ஆண்டு செப்டம்பர் முதல் கடந்த மே 15-ந் தேதி வரை தேசிய அளவில் 32.1 மில்லியன் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 34.9 மில்லியன் டன் சர்க்கரை உற்பத்தியாகிய நிலையில் தற்போது 8 சதவீதம் குறைவாக உற்பத்தி ஆகியுள்ளது. தேசிய அளவில் 500 சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டு விட்ட நிலையில் தமிழகத்தில் 16 சர்க்கரை ஆலைகளும் உத்தரப்பிரதேசத்தில் 15 சர்க்கரைஆலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன.
இதர மாநிலங்களையும் சேர்த்து மொத்தம் 37 சர்க்கரை ஆலைகள் மட்டுமே தேசிய அளவில் செயல்பட்டு வருகிறது. சர்க்கரை உற்பத்தியில் உத்தர பிரதேசத்தில் 20.42 மில்லியன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
உற்பத்தி செய்ய வாய்ப்பு
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10.15 மில்லியன் டன் சர்க்கரை உற்பத்திசெய்யப்பட்டிருந்தது. கர்நாடகத்தில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 5.5 மில்லியன் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது 5.2 மில்லியன் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதர மாநிலங்களில் சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளது.
ஆனால் தமிழகத்தில் மட்டும் 29.2 சதவீதம் சர்க்கரை உற்பத்தி அதிகரித்துள்ளது. பீகாரில் அனைத்து சர்க்கரை ஆலைகளும் மூடப்பட்டு விட்ட நிலையில் அங்கு 0.42 மில்லியன் டன் சர்க்கரை மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 34 மில்லியன் டன் சர்க்கரைஉற்பத்தி செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் 32.8 மில்லியன் டன் சர்க்கரை உற்பத்தி செய்ய வாய்ப்பு இருப்பதாக சர்க்கரை உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மூடப்பட்ட சர்க்கரை ஆலைகள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.