< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மயிலாடுதுறை: சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி - தனியார் பள்ளிக்கு விடுமுறை
|3 April 2024 9:15 AM IST
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரத்தில் சிறுத்தை சுற்றி திரிவது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்நிலையில், சிறுத்தை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சிறுத்தை தென்பட்டால் 9360889724 என்ற எண்ணை அழைத்து தெரியப்படுத்தும்படி போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, சிறுத்தை நடமாட்டம் காரணமாக செம்மங்கரையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.